மதுரை மாவட்டம் மேலூரில் காலை மற்றும் மாலை நேரத்தில் அரசு நகர் பேருந்துகள் குறிப்பிட்ட நேரத்தில் இயக்கப்படவில்லை. இதனால் பள்ளி மற்றும் கல்லூரிக்குச் செல்பவர்கள், வேலைக்குச் செல்பவர்கள் குறிப்பிட்ட நேரத்தில் செல்ல இயலவில்லை. இத்துடன் போதுமான பேருந்துகள் இயக்கப்படாததால் பள்ளி மாணவர்கள் மேலூர் பேருந்து நிலையத்திலிருந்து ஆபத்தான நிலையில் தொங்கியபடி பயணம் செய்யும் நிலை தொடர்கிறது. எனவே காலை மாலையில் கூடுதல் பேருந்துகள் இயக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. பெரிய விபத்து நடக்கும் முன் சம்பந்தப்பட்ட துறையினர் உடனடி நடவடிக்கை எடுத்தால் நன்றாக இருக்கும்.