மேலூர் நகர்மன்ற தலைவர் முகமது யாசின், நகராட்சி ஆணையாளர் பாரத், அ. வல்லாளபட்டி பேரூராட்சி சேர்மன் குமரன் ஆகியோர் தலைமை தாங்கினார்.மதுரை மாவட்ட திட்ட அலுவலர் ஷீலா சுந்தரி சிறப்புரை ஆற்றினார்.மேலூர் குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் ரதி தேவி நன்றியுரை ஆற்றினார்.100 கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
கர்ப்பிணி பெண்கள் அனைவருக்கும் வளைகாப்பு விருந்து உபசரிக்கப்பட்டது.நிகழ்ச்சியில் மேலூர் நகர் மன்ற துணைத் தலைவர் இளஞ்செழியன், நகராட்சி பொறியாளர் முத்துகுமார், மேலாளர் மாதவன், மேலூர் உணவு பாதுகாப்பு அலுவலர் பால்சாமி, மேலூர்நகர்புற அரசு ஆரம்ப சுகாதர நிலைய மருத்துவ அலுவலர் ஜாய்ஸ்யாணி, நகர் மன்ற உறுப்பினர்கள், குழந்தை வளர்ச்சி திட்ட மேற்பார்வையாளர் ராணி, அங்கன்வாடி பணியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.