டங்ஸ்டன் விவகாரம்: மதுரையை நோக்கி படையெடுக்கும் மேலூர் பகுதி மக்கள்

மதுரை மேலூர் அருகே உள்ள அரிட்டாபட்டி பகுதியில் டங்ஸ்டன் கனிம வளம் ஏலம் எடுத்திருப்பதை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி மேலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த பல்வேறு கிராமங்களின் பொதுமக்கள் இன்று (ஜன. 7) காலை கார், லாரி, வேன், டிராக்டர், இருசக்கர வாகனம் போன்றவற்றில் கூட்டம் கூட்டமாக மதுரை தல்லாகுளம் பகுதியில் உள்ள தபால் தந்தி அலுவலகத்தின் முன்பு ஆர்ப்பாட்டம் செய்வதற்காக மேலூரிலிருந்து மதுரை நோக்கி புறப்பட்டனர். 

ஆங்காங்கே போலீசார் ஊர்வலத்தை தடுத்தாலும் அதனை மீறி அவர்கள் மதுரை நோக்கி வந்து கொண்டிருக்கிறார்கள். இதனால் மதுரை மேலூர் தேசிய நெடுஞ்சாலை மிகவும் பரபரப்பாக காணப்படுகிறது. மேலூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இன்று ஒரு நாள் கடையடைப்பு போராட்டமும் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. சுமார் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள வந்து கொண்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தொடர்புடைய செய்தி