மதுரை சென்ற கணவர் மாயம்; மனைவி புகார்

மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள தும்பைப்பட்டி பாவா நகரில் வசிக்கும் துரைப்பாண்டியன் மகன் நொண்டிச்சாமி (43) என்பவர் கடந்த ஐந்தாம் தேதி மதுரைக்கு செல்வதாக கூறி சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. அவர்களது உறவினர் மற்றும் நண்பர்கள் வீடுகள் தேடியும் கிடைக்கவில்லை. இதனால் அவரது மனைவி ஆண்டிச்சி மேலூர் காவல் நிலையத்தில் நேற்று (அக். 7) காலை புகார் அளித்தார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து காணாமல் போன நொண்டிச் சாமியை தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி