மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள திருவாதவூர் திருமறைநாதர் பஞ்ச மூர்த்திகளுடன் மேலூருக்கு எழுந்தருளும் மாங்கொட்டை திருவிழா இன்று (ஜூன். 4) நடைபெற்றது. மேலூர் அருகில் உள்ள திருவாதவூர் திருமறைநாதர் வேதநாயகி அம்பாள் கோயிலின் வைகாசி பெருவிழா மே 31ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. இத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான திருமறைநாதர் பிரியாவிடை ஒரு பல்லக்கிலும், வேதநாயகி அம்பாள் மற்றொரு பல்லக்கிலும், பஞ்ச மூர்த்திகள் தனித்தனியாகவும் மேலூருக்கு நேற்று எழுந்தருளினார்கள். அதனைத் தொடர்ந்து மாங்கொட்டை திருவிழா நடைபெற்றது.