மேலூர்: கீழவளவு கோயிலில் கும்பாபிஷேகம்

மதுரை மாவட்டம், மேலூர்கீழவளவு கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீ முனியாண்டி சுவாமி ஸ்ரீ சின்னக் கருப்பு ஸ்ரீ தொட்டிச்சி அம்மன் மற்றும் ஸ்ரீ சாராயக்காளை சுவாமி திருக்கோவிலின் மகா கும்பாபிஷேகம் இன்று (மார்ச். 13) காலை சிறப்பாக நடைபெற்றது. நேற்று 12-ந் தேதி மாலை கணபதி ஹோமம், வாஸ்து சாந்தி பூஜையுடன், மாலையில் மங்கள இசையுடன் கெங்கா பூஜை, சாந்தி பூஜை, தனபூஜை, விக்னேஸ்வரா பூஜை, தொடங்கியது. 

13-ந் தேதி இன்று காலையில் இரண்டாம் கால யாகசாலை பூஜை ஹோம குண்ட பூஜை, 7 வகையான ஹோமங்கள், பூர்ணாகுதி தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து கோவில் முன்பு அமைக்கப்பட்டுள்ள யாகசாலையில் இருந்து புனித நீரினை சிவாச்சாரியார் தலைமையில் காப்பு கட்டிய பக்தர்கள் கோவிலை ஊர்வலமாக சுற்றி வந்தனர். அதனைத் தொடர்ந்து சிவாச்சாரியார்கள் வேத மந்திரம் முழங்க புனித நீரினை கும்பத்தில் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. 

தொடர்ந்து சுவாமிகளுக்கு விசேஷ தீபாராதனை நடைபெற்றது. நிகழ்ச்சியில் கீழவளவு மற்றும் சுற்றுப்புற கிராமங்களிலிருந்து ஏராளமான பக்தகோடிகள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து சிறப்பித்தனர். அதனைத் தொடர்ந்து ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்ட சிறப்பு அன்னதானம் நடைபெற்றது.

தொடர்புடைய செய்தி