மேலூர்: எலக்ட்ரிக் டூவீலரால் பற்றி எரிந்த வீடு

மதுரை மேலூர் கருங்காலக்குடி கிராமநிர்வாகஅலுவலர் ரவிச்சந்திரன் என்பவர் கருத்தபுளியம்பட்டியில் மனைவியுடன் வசித்துவருகிறார். இவர் இன்று (ஜூலை 5) தனது எலக்ட்ரிக் டூவீலரை வீட்டின் முன்பாக நிறுத்தி சார்ஜ் செய்திருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக சார்ஜர் வயர் தீப்பிடித்து வீட்டில் உள்ள அனைத்து மின்வயர்கள் செல்லும் இடங்களில் தீ பரவி வீடே தீப்பிடித்து எரிந்தது. இதனால் பீரோவில் இருந்த நகைகள், வீட்டு உபயோகப் பொருட்கள் உள்ளிட்ட ஏராளமானவை தீயில் சேதமடைந்தன. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி