மேலூர்: கேஸ் சிலிண்டர் வெடித்து வீட்டில் பொருட்கள் நாசம்

மதுரை மேலூர் அருகே அம்பலக்காரன்பட்டியை சேர்ந்த வெள்ளையப்பன் என்பவர் மலேசியாவில் பணிபுரிகிறார். இவரது மனைவி விஜயராணி (40) என்பவர் நேற்று (ஜூன் 11) காலை விஜயராணி தனது வீட்டை பூட்டி வெளியே சென்றார். இந்நிலையில் வீட்டிலிருந்த வாயு சிலிண்டர் வெடித்து மின்சாதன பொருட்கள், மூன்று பவுன் நகை, வீட்டில் இருந்த பொருட்கள் முற்றிலும் தீக்கிரையானது. மின் கசிவால் சிலிண்டர் வெடித்திருக்கலாம் என தெரிகிறது. இந்த விபத்து குறித்து கொட்டாம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

தொடர்புடைய செய்தி