மதுரை மாவட்டம் மேலூர் அருகே கருங்காலக்குடி மேலத்தெருவைச் சேர்ந்த சலீம் (64) என்பவர் நேற்று (நவ. 5) மாலை மதுரை - திருச்சி நான்கு வழிச்சாலையில் திருச்சுனை விலக்கு அருகே சாலையைக் கடக்க முயன்றபோது, திருச்சி மாவட்டம் முசிறியைச் சேர்ந்த நல்லதம்பி (29) ஓட்டி வந்த கார் மோதி தலையில் பலத்த காயமடைந்து உயிரிழந்தார். இதுகுறித்து அவரது மகன் அப்பாஸ் கொட்டாம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். போலீசார் கார் ஓட்டுநர் நல்லதம்பியைப் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.