மேலூர்: ஊர்வலமாக பால் குடம் எடுத்து வந்த பக்தர்கள்

மதுரை மாவட்டம் மேலூர் 6வது வார்டு அண்ணா காலனி காட்டு நாயக்கர்களால் நடத்தப்படும் ஸ்ரீ பூவாடை தொட்டிச்சி காளியம்மன், ஸ்ரீ சங்கிலி கருப்பு சுவாமி, ஸ்ரீ பங்களா முனியாண்டி, ஸ்ரீ அக்கினி மதுரை வீரன் சுவாமியின் 41ஆம் ஆண்டு திருவிழா இன்று (ஜூன் 3) நடைபெற்றது. கடந்த 15 தினங்களாக பக்தர்கள் காப்பு கட்டி கடுமையான விரதம் இருந்து வந்தனர். 

காப்பு கட்டிய பக்தர்கள் இன்று காலை கோவிலில் இருந்து புறப்பட்டு மண்கட்டி தெப்பகுளத்தில் இருந்து 100க்கும் மேற்பட்ட பக்தர்கள் அம்மனுக்கு பால்குடம் எடுத்து, அலகு குத்தி, பறவை காவடி எடுத்து கோவிலுக்கு ஊர்வலமாக வந்தனர். அதைத் தொடர்ந்து அம்மனுக்கு பாலாபிஷேகம் வெகு சிறப்பாக நடைபெற்றது. கோவில் முன்பாக அம்மனுக்கு பொங்கல் வைத்து சாமி வழிபாடு செய்தனர். 

ஸ்ரீ சங்கிலி கருப்பு சாமி, பங்களா முனியாண்டி சுவாமி, அக்கினி மதுரை வீரன் சுவாமிக்கு பக்தர்கள் பூங்குழி இறங்கி தங்களது நேர்த்திக் கடனை செலுத்தினர். கோவில் முன்பு கிடா வெட்டி சாமியாட்டம் வெகு சிறப்பாக நடைபெற்றது. நாளை (ஜூன் 4) காலை 7 மணி அளவில் 100க்கும் மேற்பட்ட பெண்கள் முளைப்பாரி எடுத்து நகரின் முக்கிய வீதிகளில் ஊர்வலமாக வருவார்கள்.

தொடர்புடைய செய்தி