இந்த போட்டியில் சிவகங்கை, திண்டுக்கல், மதுரை, திருச்சி, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களிலிருந்து மொத்தம் 15 காளைகள் கலந்து கொண்டன. போட்டியில் வெற்றி பெற்ற காளையின் உரிமையாளர்களுக்கும், மாடுபிடி வீரர்களுக்கும் பரிசு தொகையும், வெள்ளி காசு, அண்டா தென்னங்கன்று போன்ற பரிசுகளை விழா குழுவினர் வழங்கினர்.
இந்த போட்டியை காண சுற்றுப்புற கிராமங்களான கொட்டாம்பட்டி, மேலூர், வெள்ளாளப்பட்டி, மணப்பச்சேரி, பள்ளப்பட்டி, சிங்கம்புணரி, நத்தம், துவரங்குறிச்சி, ஆகிய பகுதியில் இருந்து வந்த பொதுமக்கள் மஞ்சுவிரட்டு போட்டியை கண்டு களித்தனர். நிகழ்ச்சியை பூமங்களப்பட்டி ஊர் பொதுமக்கள், இளைஞர் ஏற்பாடு செய்திருந்தனர்