மதுரை அழகர்கோயில் அருகே எம்ஏவிஎம் கல்லூரி பேருந்து கட்டுப்பாட்டை இழந்து சாலையோர கடையில் மோதியதில், கூலித் தொழிலாளி ஆறுமுகம் (நவ. 8) உயிரிழந்தார். விபத்தில் இரண்டு கால்களும் துண்டிக்கப்பட்ட நிலையில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். ஆட்டோ டிரைவர் கண்ணன் சிகிச்சை பெற்று வருகிறார். அப்பன் திருப்பதி போலீசார் விபத்து குறித்து விசாரித்து வருகின்றனர்.