மேலூர்: முட்டு கிடா போட்டியில் 40 ஜோடிகள் பங்கேற்பு

மதுரை நாட்டின் முட்டுக் கிடா வளர்ப்போர் சங்கத்தின் சார்பில் தமிழர் திருநாள் தை பொங்கலை முன்னிட்டு இன்று (ஜன. 11) மதுரை மாவட்டம் மேலூர் வட்டம் கீரனூர் ஊராட்சி சுண்ணாம்பூரில் முட்டுக் கிடா போட்டி நடைபெற்றது. 

இந்த போட்டியை கீரனூர் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர்கள் கதிரவன், கௌசல்யா வீரசெந்தில் மற்றும் தொழிலதிபர் பாலா பிரதர்ஸ் தொடங்கி வைத்தனர். இந்த போட்டியில் மதுரை, சிவகங்கை, தேனி, இராமநாதபுரம், தென்காசி, திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 40க்கும் மேற்பட்ட முட்டுக் கிடா ஜோடிகள் கலந்து கொண்டன. போட்டியில் வெற்றி பெற்ற முட்டுக் கிடாக்களுக்கு எட்டு கிலோ பித்தளை அன்டாவும், சரி ஜோடிக்கு நான்கு கிலோ அன்டாவும், தோல்வி அடைந்த கிடாக்களுக்கு சிறப்பு பரிசாக குக்கரும் வழங்கப்பட்டது. 

இந்த போட்டியினை மதுரை நாட்டின் முட்டுக் கிடா சங்கத்தின் தலைவர் எஸ்.எம். பாண்டி, செயலாளர் எம். முகமது மாலிக், பொருளாளர் ஆர்.டி.எஸ். குமார் மற்றும் சங்க நிர்வாகிகள் உறுப்பினர்கள் ஏற்பாடு செய்திருந்தனர். இந்த போட்டியைக் கண்டுகளிக்க பல்வேறு ஊர்களில் இருந்து ஆண்கள், பெண்கள் என ஏராளமானோர் வந்திருந்தனர்.

தொடர்புடைய செய்தி