மேலூர்: லோக் அதாலத்தில் 380 வழக்குகளுக்கு சமரச தீர்வு

மதுரை மாவட்டம் மேலூரில் தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு உத்தரவின்படி தேசிய அளவிலான மக்கள் நீதிமன்றம் லோக் அதாலத் நிகழ்ச்சி நேற்று (ஜூன் 14) கோர்ட் வளாகத்தில் நடைபெற்றது. 

நிகழ்ச்சிக்கு சார்பு நீதிமன்ற நீதிபதி சாமுண்டீஸ்வரி பிரபா, மாவட்ட உரிமையியல் நீதிமன்ற நீதிபதி மகாராஜன், குற்றவியல் நீதிமன்ற நீதிபதி தென்றல் முத்து ஆகியோர் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் நிலுவையில் உள்ள சிவில், கிரிமினல் வாகன விபத்து, காசோலை சம்பந்தப்பட்ட வழக்குகள், வங்கி வாராக் கடன்கள் மற்றும் சிறு வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. 

இந்த சமரசம் மூலம் மொத்தம் 380 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு அதில் 343 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. அதில் ரூ. 54 லட்சத்து 64 ஆயிரத்து 300 ரூபாய் மதிப்பில் சமரசம் மூலம் தீர்வு காணப்பட்டன. மேலூர் வட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு, மற்றும் வழக்கறிஞர்கள் ஜோதிமணி, ராஜராஜன், துரைப்பாண்டியன், மற்றும் அனைத்து வழக்கறிஞர்கள், நீதிமன்ற ஊழியர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்தி