மதுரை: பிரதமர் பங்கேற்கும் நிகழ்ச்சிக்கான பணிகள் தீவிரம்

மதுரைக்கு நாளை (மார்ச் 1)மாலை வரும் பிரதமர் நரேந்திர மோடி, மதுரை விமான நிலைய வளாகத்தில் நடைபெறும் அரசு விழாவில் பங்கேற்கிறார். இதில், தமிழ்நாடு - கேரளா இணைக்கும் திருமங்கலம் - கொல்லம் தேசிய நெடுஞ்சாலையின் ஒரு பகுதியை மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கிறார். மேலும், மதுரை விமான நிலைய விரிவாக்கத்தின் ஒரு பகுதியான வான் கட்டுப்பாட்டு அறை கட்டிடத்தையும் திறந்து வைக்கிறார். இதைத் தொடர்ந்து 150 ஏக்கரில் அமைக்கப்பட்டுள்ள பொதுக்கூட்டத்தில் பங்கேற்பார்.

தொடர்புடைய செய்தி