மதுரை: காதலிக்கு உல்லாச வீடியோவை காட்டி மிரட்டிய தேனி மாணவன்

மதுரை தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் படிக்கும் தேனி ஆண்டிபட்டியைச் சேர்ந்த வசந்த் (21), அதே கல்லூரியில் படிக்கும் 20 வயது மாணவியை திருமணம் செய்வதாகக் கூறி காதலித்துள்ளார். தேனியில் உள்ள ஒரு வீட்டில் மாணவியுடன் உல்லாசமாக இருந்தபோது, அவருக்குத் தெரியாமல் வசந்த் வீடியோ எடுத்துள்ளார். மாணவி அவருடன் பழகுவதை தவிர்த்ததால் ஆத்திரமடைந்த வசந்த், வீடியோவை இணையதளத்தில் பதிவிடுவதாக மிரட்டியுள்ளார். இதனால் மனமுடைந்த மாணவி தற்கொலைக்கு முயன்றதை அடுத்து, போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி