மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் நிகழ்வு நாளை மறுநாள் நடைபெற உள்ளது. இந்நிலையில் கள்ளழகர் இன்று மாலை 6 மணியளவில் அழகர் கோவிலில் இருந்து வழக்கமான உற்சாகத்துடன் பல்லக்கில் எழுந்தருளி மதுரைக்கு புறப்பட்டார். மதுரைக்கு வரும் வழிநெடுக அவரை வரவேற்க ஏற்பாடுகள் தீவிரமாக செய்யப்பட்டுள்ளது. அழகர் மொத்தம் 494 மண்டபப்படிகளில் எழுந்தருளி மக்களுக்கு அருள்பாலிக்க உள்ளார். கள்ளழகர் வருகையை முன்னிட்டு ஆயிரக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.