மதுரையின் முன்னாள் துணை மேயரும் மு.க. அழகிரியின் ஆதரவாளருமான பி.எம். மன்னன், பிப்ரவரி 17 அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார். திமுகவில் மக்கள் பணி செய்ய வாய்ப்பு மறுக்கப்பட்டதால் இந்த முடிவை எடுத்ததாக அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.