மதுரை மாநகராட்சி பட்ஜெட் தாக்கல்: அதிமுக வெளிநடப்பு, பாஜக போராட்டம்

மூன்று மாதங்களுக்குப் பிறகு மதுரை மாநகராட்சி மாமன்ற கூட்டம் இன்று (பிப்ரவரி 10) மேயர் (பொறுப்பு) நாகராஜன் தலைமையில் நடைபெற்றது. பட்ஜெட் விவாதம் இன்றி, 136 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு, 2026-27 நிதியாண்டுக்கான உபரி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அதிமுக உறுப்பினர்கள் முழக்கமிட்டு வெளிநடப்பு செய்தனர். பாஜக உறுப்பினர் பூமாஸ்ரீ நாய்களால் ஏற்படும் பாதிப்பு குறித்து போராட்டம் நடத்தியபோது திமுகவினருடன் வாக்குவாதம் ஏற்பட்டது. ராஜினாமா செய்த மண்டல தலைவர்கள் கையெழுத்திட்டுவிட்டு பங்கேற்காமல் புறப்பட்டனர்.

தொடர்புடைய செய்தி