வேலூர் மணப்பட்டி பகுதியைச் சேர்ந்த விவசாயி பூவை ராஜன் (40) நேற்று (பிப்ரவரி 7) மாலை காரில் தும்பைபட்டி சர்வீஸ் ரோட்டில் சென்றபோது, கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனங்கள் மீது மோதி விபத்துக்குள்ளானது. மக்கள் அலறி அடித்து ஓடியதால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. கார் அருகிலிருந்த கடைக்குள் புகுந்து நின்றது. இதுகுறித்து மேலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.