மதுரை: கள்ளழகர் கோயில் உண்டியலில் ரூ. 53 லட்சம் காணிக்கை

மதுரை மாவட்டம் கள்ளழகர் திருக்கோயிலில் உண்டியல் காணிக்கை மாதந்தோறும் எண்ணப்படுவது வழக்கம். அதனடிப்படையில் நேற்று (ஜூலை 31) எண்ணப்பட்டது. இதில் ரூ. 53 லட்சத்து 54 ஆயிரத்து 409 ரொக்கம், 32 கிராம் தங்கம், 250 கிராம் வெள்ளியும் காணிக்கையாக இருந்தது என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. உண்டியல் எண்ணும் போது அறங்காவலர்கள், அறநிலையத்துறை அதிகாரிகள் பலர் இருந்தனர்.

தொடர்புடைய செய்தி