மதுரை மேலூர் நீதிமன்ற கட்டிடங்கள் 120 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டவை. கடந்த 12ஆம் தேதி நீதிமன்றம் செயல்பட்டுக் கொண்டிருந்தபோது, மேற்கூரையில் இருந்து ஸ்லாப் இடிந்து விழுந்தது. இதனைக் கண்டித்து வழக்கறிஞர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். புதிய கட்டிடம் கட்டுவதற்கு உடனடி நடவடிக்கை எடுக்கக் கோரி, மேலூர் வழக்கறிஞர் சங்கத் தலைவர் திருமேனி தலைமையில் இன்று (பிப். 16) மேலூர் பேருந்து நிலையம் முன்பு உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.