மேலூரில் வழக்கறிஞர்கள் சாலை மறியல்.. பரபரப்பு

மதுரை மேலூர் தாலுகா அலுவலகத்தில் உள்ள 120 ஆண்டுகள் பழமையான நீதிமன்ற கட்டிடத்தின் மேற்கூரை அடிக்கடி இடிந்து விழுவதால், வழக்கறிஞர்கள் சங்கத்தினர் உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி மனு அளித்தும், போராட்டங்கள் நடத்தியும் பயனளிக்கவில்லை. இதனால், இன்று (பிப். 18) சென்னை - திருச்சி நான்கு வழி சாலை சூரக்குண்டு அருகே 100-க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அரை மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி