மதுரை மாவட்ட தொழில் மையம் சார்பில் சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை சார்பில் கொட்டாம்பட்டி ஊராட்சி ஒன்றிய பி.எம்.எம்.யு மகளிர் திட்ட அலுவலக கூட்ட அரங்கில் மதுரை மாவட்ட புள்ளி விவர ஆய்வாளர் பாண்டியராஜா அவர்கள் வட்டார அளவிலான தொழில் முனைவோர்களுக்கு ஊக்குவிப்பு முகாம் இன்று (மார்ச். 14) நடைபெற்றது. தமிழக அரசின் கீழ் செயல்படுத்தப்படும் கடன் உதவி திட்டங்களான (UYEGP) வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு உருவாக்கத் திட்டம் (KKT) கலைஞர் கைவினைத் தொழில் திட்டம் மற்றும் (NEEDS) புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவனம் மேம்பாட்டுத் திட்டம், திட்ட மதிப்பீடு ஒரு லட்சம் முதல் 500 லட்சம் வரை மானியமாக 25 சதவீதம் முதல் 35 சதவீதம் வரை உள்ள கடன் திட்டங்கள் குறித்து விரிவாக எடுத்துரைத்தார். இக்கூட்டத்தில் 120க்கும் மேற்பட்ட ஆர்வமுள்ள தொழில் முனைவோர்கள் கலந்து கொண்டனர். மேலும் மகளிர் திட்ட அலுவலர்கள் எம்.கே.மோகனா வட்டார இயக்க மேலாளர், பயிற்சியாளர் மற்றும் வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் கலந்து கொண்டனர்.