வீட்டின் பூட்டை உடைத்து 28 பவுன் நகை, பணம் திருட்டு

மதுரை மேலூர் அருகே வசிக்கும் சரவணகுமார் வெளிநாட்டில் இருந்து சொந்த ஊர் திரும்பிய நிலையில், குடும்பத்துடன் சிங்கம்புணரி திருவிழாவுக்கு சென்றுவிட்டு நேற்று (ஜூன் 3) காலை வீடு திரும்பியபோது, வீட்டின் கதவு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 28 பவுன் நகை மற்றும் 48 ஆயிரம் ரூபாய் பணம் கொள்ளையடிக்கப்பட்டதாக தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி, அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி