மதுரை அருகே ஒத்தக்கடையை நோக்கி இன்று (ஜன. 10) காலை வைகோ நடைபயணம் மேற்கொண்டார். அப்போது, மதுரையிலிருந்து ஸ்ரீரங்கத்திற்கு காரில் சென்ற மதுரை உயர்நீதிமன்ற கிளை அரசு வக்கீல் சித்தார்த்தன்(46), வைகோவை பார்க்க காரை விட்டு இறங்கி சாலை கடக்கும்போது, மதுரையிலிருந்து திருச்சி நோக்கிச் சென்ற கார் அவர் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த சித்தார்த்தன், மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். இது குறித்து மேலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.