மதுரை மாவட்டம் மேலூரில் வாரந்தோறும் நடைபெறும் ஆட்டுச் சந்தையில், பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு இன்று (மே. 25) ஆடுகளின் விலை அதிகரித்துக் காணப்பட்டது. விவசாயிகள் கொண்டு வந்த ஆடுகள் சராசரியாக ரூ.5 ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரம் வரை விற்பனையாகின. வியாபாரிகள் தரப்பில், இன்று மட்டும் ரூ.1 கோடிக்கும் மேல் வியாபாரம் நடந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.