மதுரை அண்ணாநகர் சினிப்பிரியா தியேட்டர் எதிரில் கையில் கத்தியுடன் சுற்றித் திரிந்த ஸ்லோவாக் நாட்டைச் சேர்ந்த நபர் ஒருவர், அங்கிருந்த 4 கார் கண்ணாடிகளை உடைத்து பொதுமக்களை மிரட்டியுள்ளார். பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில் விரைந்து சென்ற காவல்துறையினர், அந்த நபரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். முதற்கட்ட விசாரணையில், அவர் மனநலம் பாதிக்கப்பட்டவரா அல்லது போதைப்பழக்கத்திற்கு அடிமையானவரா என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.