மதுரை மாவட்டம் மேலூர் அருகே குமுட்ராம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த லட்சுமணன் (53) என்ற விவசாயி, நேற்று முன்தினம் (மே 4) மதியம் பொன்னமராவதியில் மகளைப் பார்த்துவிட்டு இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். பொட்டப்பட்டி விலக்கு அருகே வந்தபோது, அவரது வாகனம் நிலைதடுமாறி பாலத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.