தேர்தல் அறிக்கை குழுவின் கருத்து கேட்பு கூட்டம்

மதுரை மேலூர் சட்டமன்றத் தொகுதி சார்பில் தி. மு. க. தேர்தல் அறிக்கை குழு கருத்து கேட்பு கூட்டம் மேலூர் மூவேந்தர் பண்பாட்டுக் கழகத்தில் நேற்று (பிப். 10) நடைபெற்றது. வணிக வரித்துறை அமைச்சர் மூர்த்தி, வனத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் ஆகியோர் தலைமை வகித்த இக்கூட்டத்தில், முல்லைப் பெரியாறு பாசன விவசாய சங்க நிர்வாகிகள் சார்பில் அலங்காநல்லூர் சர்க்கரை ஆலையை திறக்க வேண்டும், மேலூரில் கர்னல் பென்னிகுவிக் முழு உருவ வெண்கல சிலை அமைக்க வேண்டும், புதிய விவசாயிகளுக்கு கடன் உதவி வழங்க வேண்டும், குடிநீருக்காக புதிய அணை கட்ட வேண்டும் போன்ற கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.

தொடர்புடைய செய்தி