மதுரை: சாலை விபத்தில் முதியவர் பலி

மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி அருகே நல்லசுக்காம்பட்டியைச் சேர்ந்தவர் 72 வயது விவசாயி ஜெயராம். இவர் கடந்த மே 22 ஆம் தேதி மாலை பரமநாதபுரம் நான்கு வழிச்சாலையில் இருசக்கர வாகனத்தில் சாலையை கடக்க முயன்றபோது, மதுரையிலிருந்து திருச்சி நோக்கிச் சென்ற கார் மோதி உயிரிழந்தார். இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி