மேலூர்: சட்ட விரோதமாக மது விற்பனை செய்த முதியவர் கைது

மதுரை மாவட்டம் மேலூர் அருகே தெற்குப்பட்டி பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனை நடைபெறுவதாக கிடைத்த தகவலின் பேரில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, மல்லிகை நகரைச் சேர்ந்த சிவகுமார் (62) என்ற முதியவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து 63 மதுபாட்டில்கள் மற்றும் ரூபாய் 2,300 ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி