தற்போது மீட்டர் பெட்டியில் கம்பை தட்டினால் கீழே விழும் நிலையில் இருப்பதால் அடிக்கடி காற்று வீசுவதால், மழைக்காலமாக இருப்பதால் எந்த நேரம் வேண்டுமானாலும் இந்த மின்சார மீட்டர் பெட்டி விழுந்தால் அதில் வரும் மின்சாரம் பெரிதும் ஆபத்தை ஏற்படுத்தும் என்று இப்பகுதி பொதுமக்கள் கூறுகின்றனர். எனவே நகராட்சி நிர்வாகத்திடம் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு இப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் நகராட்சி அதிகாரியிடம் கூறியுள்ளதாக தெரிவித்தனர். தற்போது நேற்று நடந்த வெள்ளரிபட்டியில் அரசு பள்ளி மாணவன் மீட்டர் பெட்டி ஓரத்தில் விளையாடிக் கொண்டிருக்கும் போது மின்சாரம் அவர் மீது பாய்ந்து இறந்து போனார். அது போன்ற நிகழ்வுகள் நடக்காமல் இருப்பதற்காக இப்பகுதி பொதுமக்கள் நகராட்சி நிர்வாகம் உடனடியாக தலையிட்டு மீட்டர் பெட்டியை சரி செய்து தருமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.
IND vs SL: டி20 தொடரை வெற்றியுடன் தொடங்கிய இந்திய அணி