பின்னர் சிறப்பு அலங்காரத்தில் பெருமாள் அருள் பாலித்தார். இந்த திருவிழா வருகிற ஜன. 9-ம் தேதி வரை நடைபெறும். ஜன. 10-ம் தேதி வைகுண்ட ஏகாதசியையொட்டி அன்று அதிகாலையில் சொர்க்க வாசல் திறப்பு திருவிழா நடைபெற உள்ளது. அதன் பிறகு ராப்பத்து உற்சவம் தொடங்கி நடைபெறுகிறது. ஜன. 19-ம் தேதி இந்த விழா நிறைவு பெறும். இதற்கான ஏற்பாடுகளை அறங்காவலர் குழு தலைவர் வெங்காடாஜலம், துணை ஆணையர் செல்லத்துரை, அறங்காவலர்கள் பாண்டியராஜன், செந்தில்குமார், மீனாட்சி, ரவிக்குமார் மற்றும் கண்காணிப்பாளர்கள் செய்து வருகின்றனர்.
வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரிபார்ப்பு பணிகள் தீவிரம்