இந்த நிகழ்ச்சியில் மதுரை பெண் குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் பெண் குழந்தைகள் குற்றத் தடுப்பு பிரிவு மாவட்டத் துணைக் கண்காணிப்பாளர் ராதாகிருஷ்ணன் அவர்களும் மற்றும் மதுரை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு அலுவலர் அவர்களின் வழிகாட்டுதலின்படி தன்னார்வலர் ராஜாராம் நோபல் அவர்களும், பெண் குழந்தைகள் பாதுகாப்பு பிரிவு காவலர்களும், அப்பன் திருப்பதி காவல் நிலைய சார்பாக ஆய்வாளர் சுரேஷ் அவர்களும் கலந்து கொண்டு மாணவர்களுக்கு விழிப்புணர்வை விரிவாக எடுத்துக் கூறினர்.
இந்த விழாவில் பெண் குழந்தைகள் எவ்வாறு இருக்க வேண்டும், அவர்களுக்கு வரக்கூடிய பிரச்சினைகளில் இருந்து எவ்வாறு தங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்பது சார்ந்து மாணவர்களுக்கு விரிவாக எடுத்துக் கூறப்பட்டது. இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை பள்ளியின் செயலரும் அருள்மிகு கள்ளழகர் திருக்கோவில் துணை ஆணையருமான யக்ன நாராயணன் ஏற்பாடு செய்திருந்தார். பள்ளியில் தலைமை ஆசிரியர் செல்வராஜ் அவர்கள் நன்றி கூறினார்கள்.