மதுரை அரசு மருத்துவமனையில் மே 20 அன்று சாலை விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த ஜெயா (37), மே 22 அன்று மூளைச்சாவு அடைந்தார். அவரது உறவினர்கள் உடல் உறுப்புகளை தானம் செய்ய முன்வந்தனர். கல்லீரல் தஞ்சாவூர் மீனாட்சி மருத்துவமனைக்கும், சிறுநீரகங்கள் திருச்சி காவேரி மருத்துவமனை மற்றும் திருநெல்வேலி கிட்னி சென்டருக்கும், தோல், கருவிழி, எலும்பு மதுரை அரசு மருத்துவமனைக்கும் தானமாக வழங்கப்பட்டன. பின்னர் ஜெயாவிற்கு அரசு மரியாதை அளிக்கப்பட்டது.