மதுரை மாவட்டம் மேலூர் மேலவளவு அருகே புலிபட்டியைச் சேர்ந்தவர் குமரேசன் (28) .இவர் சென்னையில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இவருக்கு 2 மாதத்திற்கு முன்புதான் கரூரை சேர்ந்த வினிதா என்பவருடன் திருமணம் ஆனது.
இந்நிலையில் சம்பவதினத்தன்று குமேரசன் ஊருக்கு வந்தார். அப்போது அவரது தாயார் வனிதா குறித்து கேட்டுள்ளார். அதற்கு அவர் மனைவி 2 நாட்களில் வருவார் என தாயிடம் கூறியுள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் (செப்.,24) மாலை வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து மேலவளவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.