சேறும் சகதியுமாக காட்சியளிக்கும் பேருந்து நிலையம்.

மதுரை மாவட்டம் மேலூர் பேருந்து நிலையம் குண்டும் குழியுமாக காணப்படுவதால் பொதுமக்கள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர்.

மதுரை மாவட்டம் மேலூரில் பழைய பேருந்து நிலையத்தை இடித்து விட்டு புதிய பேருந்து நிலையம் கட்டும் பணி கடந்த ஒரு வருடமாக நடைபெற்று வருகிறது.

இதனால் தற்காலிக பேருந்து நிலையம் அழகர் கோவில் சாலையில் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. ஆனால் அதில் போதுமான வசதிகள் ஏதும் செய்து கொடுக்கப்படவில்லை. இந்நிலையில் தற்போது பெய்து வரும் தொடர் மழையால் தற்காலிக பேருந்து நிலையம் முழுவதும் குண்டும் குழியுமாக, சேறும் சகதியமாக காணப்படுகிறது. இதனால் பள்ளி செல்லும் மாணவர்களும் பொது மக்களும் பேருந்தில்ஏறுவதற்கு மிகவும் சிரமப்படுகின்றனர்.
இதற்கு நல்லதொரு தீர்வு காண வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி