மதுரை: அழகர் கோயில் உண்டியலில் 65 கிராம் தங்கம்

மதுரை அருகே உள்ள கள்ளழகர் திருக்கோயிலில் மாதந்தோறும் உண்டியல் காணிக்கைகள் எண்ணப்படுவது வழக்கம். அதனடிப்படையில் நேற்று (பிப். 26) எண்ணப்பட்டதில் ரூ. 77 லட்சத்து 50 ஆயிரத்து 582 ரொக்கம், 65 கிராம் தங்கம் மற்றும் 460 கிராம் வெள்ளி பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன. இந்த பணிகளில் கோயில் துணை ஆணையர் யக்ஞ நாராயணன், கூடழலகர் பெருமாள் கோயில் உதவி ஆணையர் பிரதீபா, கண்காணிப்பாளர்கள் அருட்செல்வம், ரம்யா சுபாஷிணி, அருணாதேவி, பிஆர்ஓ முருகன் உள்ளிட்டோர் ஈடுபட்டனர்.

தொடர்புடைய செய்தி