மதுரை: மும்பையில் இருந்து கஞ்சா கடத்தி வந்த வாலிபர் கைது

மும்பையில் இருந்து மதுரைக்கு கஞ்சா கடத்தி வந்து விற்பனை செய்த வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

மேலும் 2 பேர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது. தெப்பக்குளம் போலீஸ் எஸ்ஐ சுபத்ராவுக்கு கஞ்சா விற்பனை செய்வதாக ரகசிய தகவல் கிடைத்தது. அவரது தலைமையில் ஏட்டுக்கள் கணேசன், ராஜூ ஆகியோருடன் புதுராமநாதபுரம் ரோட்டில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக வந்த நபரிடம் விசாரணை நடத்தினர்.

மேலும் அவரை சோதனை செய்த போது கையில் வைத்திருந்த பையில் அரசால் தடைசெய்யப்பட்ட சுமார் 1 கிலோ 100 கிராம் கஞ்சா இருந்தது தெரிந்தது. அவர் புது மீனாட்சிநகரை சேர்ந்த சேதுபதி(21) எனத்தெரிந்தது. மேலும் இவர் தனது நண்பர்களான சேதுராஜன் மற்றும் சுரேஸ் ஆகியோர்களுடன் சேர்ந்து மும்பை புனே பகுதிக்கு சென்று கஞ்சாவை வாங்கி வந்து விற்பனை செய்து வந்தது தெரிந்தது. அவரிடம் கஞ்சாவை பறிமுதல் செய்து கைது செய்தனர். மேலும் இது தொடர்பாக சேதுபதியின் நண்பர்கள் சேதுராஜன் மற்றும் சுரேஸ் ஆகியோர் மீது வழக்குபதிவு செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி