மதுரை: தற்கொலை செய்து கொண்ட இளம்பெண்: ஆர்.டி.ஓ விசாரணை தீவிரம்

மதுரை தல்லாகுளம் அருகே ஆத்திக்குளம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியை சேர்ந்த புவனேஸ்வரி (26) நேற்று யாரும் இல்லாதபோது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இவருக்கு ஒரு மகள் உள்ளார். இதுகுறித்து தகவலறிந்த தல்லாகுளம் போலீசார், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில், புவனேஸ்வரியின் தற்கொலை குறித்து ஆர்.டி.ஓ விசாரணையும் தீவிரமாக நடத்தப்பட்டு வருகிறது.

தொடர்புடைய செய்தி