அவரை குடிப்பழக்கத்தில் இருந்து நிறுத்தும்படி மனைவி பலமுறை எச்சரித்துள்ளார். அவர் குடிப்பழக்கத்தை நிறுத்தவில்லை. இனிமேல் குடித்தால் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டு விடுவேன் என்று கணவரை மிரட்ட முடிவு செய்தார். அதனால் உடலில் மண்ணெண்ணை ஊற்றி தீ வைத்துக் கொள்வது போல் மிரட்டி உள்ளார்.
துரதிஷ்டவசமாக அவர் அணிந்திருந்த நைலான் சேலையில் தீ பற்றியது. இதில் உடல் தீயில் கருகி உயிருக்கு போராடினார். அவரை சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி திருக்குமாரி உயிரிழந்தார்.
இந்த சம்பவம் குறித்து அவருடைய அம்மா பவுனம்மாள் கே புதூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து அவர் சாவு குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.