மதுரை காந்தி நினைவு அருங்காட்சியகம் அருகேயுள்ள பூங்கா முருகன் கோயில் சஷ்டி மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்வில், தமிழ்நாடு தூய்மைப் பணியாளர்கள் நல வாரியத் தலைவர் திப்பம்பட்டி வெ. ஆறுச்சாமி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு, தூய்மைப் பணியாளர்களுக்கு நல வாரிய அடையாள அட்டைகளை வழங்கினார். இந்த நிகழ்வுக்கு மாநகராட்சி மேயர் (பொறுப்பு) தி. நாகராஜன் தலைமை வகித்தார். மாநகராட்சி உதவி நகர்நல அலுவலர் அபிஷேக், மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் தூய்மைப் பணியாளர்கள் பலர் இதில் பங்கேற்றனர்.