மதுரை: எகிப்தில் இருந்து வெங்காயம் கொண்டு வந்தது நாங்கள்தான்

மதுரை அதிமுக அலுவலகத்தில் ஐடி விங் சார்பில் மொபைல் செயலியை முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு அறிமுகம் செய்து வைத்தார். பின்னர் அவர் கூறியதாவது: அதிமுக ஆட்சி காலத்தில் வெங்காயத்திற்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டது. எகிப்திலிருந்து கொண்டு வந்தோம். வடஇந்தியாவில் இருந்து காய்கறிகளை கொண்டு வந்து மக்களுக்கு வழங்கினோம். அதிமுக ஆட்சி அமைந்ததும் பூரண மதுவிலக்கு குறித்து எடப்பாடி பழனிசாமி தான் முடிவு எடுப்பார் என்றார். நடிகர் விஜய் பிரசாரம் குறித்து கேட்டபோது, 'இதற்கு மேல் பேச மாட்டேன்' என கும்பிடு போட்டு பதிலளித்தார்.

தொடர்புடைய செய்தி