இந்நிலையில், தீபாவளி பண்டிகையான இன்று அதிகாலை 4 மணிக்கே பணிக்கு வந்த மதுரை மாநகராட்சி தூய்மை பணியாளர்கள், மீனாட்சியம்மன் கோவிலைச் சுற்றி தேங்கி கிடந்த குப்பைகளை அகற்றினர். தீபாவளியான இன்றும் கூட மக்களுக்கான முன்களப் பணியாளர்களாக தூய்மை பணியாளர்கள் அர்ப்பணிப்புடன் பணியில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து அவர்கள் கூறியபோது, "தீபாவளி பண்டிகையை கொண்டாடியதே இல்லை. வேலையெல்லாம் முடித்துவிட்டு நேரம் இருந்தால் கொண்டாடுவோம். மக்களுக்காக தான் இந்தப் பணியை செய்கிறோம். இது தான் எங்களுக்கு சந்தோஷம் என்றனர்.