நான் நாட்டின் எந்த பகுதியில் இருந்தாலும் காதுகளும் சிந்தனைகளும் தமிழகத்தை நோக்கித்தான் இருக்கும், அமித்ஷாவால் திமுகவை தோற்கடிக்க முடியாது உண்மைதான். ஆனால் தமிழக மக்கள் உங்களை தோற்கடிப்பார்கள், எனது நீண்ட கால அரசியல் அனுபவத்தில் சொல்கிறேன், 2026ல் திமுகவை மக்கள் தூக்கி எறிய காத்திருக்கிறார்கள்.
உங்கள் காதுகளை திறந்து வைத்து கேளுங்கள் 2026 தமிழகம் மற்றும் மேற்கு வங்கத்தில் பாஜக கூட்டணி வெல்லும். இங்குள்ள ஆட்சி ஊழலில் திளைத்துக்கொண்டுள்ளது, திமுக ஆட்சி மத்திய அரசின் நன்மைகளை மடைமாற்றி தமிழகத்துக்கு கிடைக்காமல் செய்கிறார்கள், திமுக ஆட்சியில் ஏழைகள் விலைவாசி உயர்வால் வாழ முடியாத சூழலில் மத்திய அரசின் திட்டங்கள் கிடைக்காமல் தவித்து வருகிறார்கள் என்றார்.