இந்த ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு மத்திய அமைச்சரின் நிர்மலா சீதாராமனுக்கு எதிராகவும் கண்டன பதாகைகளை ஏந்தி கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
தொடர்ந்து மத்திய மாநில அரசுகள் விஸ்வகர்மா சமுதாய மக்களை மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் (MBC) இணைத்து ஒதுக்கீடு வழங்க வேண்டும், விஸ்வகர்மா சமுதாய மக்கள் அனைவருக்கும் ஒரே நடைமுறையாக "விஸ்வகர்மா" என்று சாதிச்சான்றிதழ் வழங்க வேண்டும், மாநில, மத்திய அரசுகள் செப்டம்பர் 17, விஸ்வகர்மா ஜெயந்தி விழாவினை அரசு பொதுவிழாவாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தியும் முழக்கங்களை எழுப்பினர்.
அப்போது விஸ்வகர்மா அமைப்பினர் அனுமதிக்கப்பட்ட இடத்தை கடந்து சாலையின் நடுவே நின்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதாக காவல்துறையினர் கூறியதால் விஸ்வகர்மா அமைப்பினருக்கும் காவல்துறையினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.