மதுரை -காச்சிக்குடா இடையே ரயில் சேவை நீட்டிப்பு

காச்சிக்குடாவிலிருந்து வாரந்தோறும் திங்கள்கிழமைகளில் மாலை 8.30 மணிக்கு மதுரை செல்லும் சிறப்பு விரைவு ரயில் (எண்: 07191) ஜூன் 9 முதல் ஜூலை 28-ஆம் தேதி வரையும், மறுமார்க்கமாக மதுரையிலிருந்து வாரத்தோறும் புதன்கிழமைகளில் காலை 10.40-க்கு காச்சிக்குடா செல்லும் ரயில் (எண்: 07192) ஜூன் 11 முதல் ஜூலை 30-ஆம் தேதி வரையும் நீட்டிக்கப்படவுள்ளது. 

அதேபோல், காச்சிக்குடாவிலிருந்து வாரந்தோறும் வெள்ளிக்கிழமைகளில் காலை 7.35-க்கு நாகர்கோவிலுக்கு புறப்படும் ரயில் (எண்: 07435) ஜூன் 13 முதல் ஜூலை 11-ஆம் தேதி வரையும், மறுமார்க்கமாக நாகர்கோவிலிலிருந்து வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 12.30-க்கு காச்சிக்குடா செல்லும் ரயில் (எண்: 07436) ஜூன் 15 முதல் ஜூலை 13 வரையும் நீட்டிக்கப்படும். இதற்கான முன்பதிவுகள் தற்போது தொடங்கப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே சார்பில் வெளியிடப்பட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி