திருப்பாலை: ட்ரான்ஸ்பார்மர் அருகே பற்றி எரிந்த தீ

மதுரையில் இரவில் சாலையோரத்தில் மின்சார ட்ரான்ஸ்ஃபார்மர் அருகே பற்றிய எரிந்த தீ - விரைந்துவந்து தீயை கட்டுப்படுத்திய தீயணைப்புத்துறையினர் - பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது. மதுரை மாநகர் திருப்பாலை டிஎன்இபி காலனி அருகே இரவில் திடீரென மின்சார ட்ரான்ஸ்ஃபார்மர் அருகே தீ பற்றியிருந்த நிலையில் அருகில் உள்ள பொதுமக்கள் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் அளித்தனர். 

இந்த நிலையில் விரைந்து வந்த தல்லாகுளம் தீயணைப்புத்துறை காவல்துறையினர் அங்கு புதர்மண்டி கிடந்த பகுதியில் உள்ள மரங்களில் தீ பரவி எரிந்த நிலையில் அதனை தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். தீயானது அருகில் உள்ள பகுதிகளுக்கு பரவாத நிலையில் மின்சார ட்ரான்ஸ்ஃபார்மருக்கு தீ பரவாமல் நல்லவாய்ப்பாக பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது. 

திருப்பாலை நத்தம் பறக்கும் பாலத்தின் கீழ் பகுதியில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக புகை மூட்டம் நத்தம் பறக்கும் பாலம் மற்றும் சாலை முழுவதிலும் பரவியதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளானர். இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்ட நிலையில் தீயணைப்புத்துறையினர் முழுவதுமாக தீயை கட்டுக்குள் கொண்டு வந்த பின்னர் போக்குவரத்து சீரானது. 

மதுரை திருப்பாலை பகுதியில் மின்சார ட்ரான்ஸ்ஃபார்மர் அருகே ஏற்பட்ட தீ விபத்தால் சிறிது நேரம் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

தொடர்புடைய செய்தி