நடிகர் விஜய் ஜூன் 22 ஆம் தேதி 50-வது பிறந்த நாளை முன்னிட்டு சிறப்பாக கொண்டாடும் விதமாக அவரது ரசிகர்கள் ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் மரக்கன்றுகள் வழங்கி கொண்டாட ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.
நடிகர் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு, ரசிகர்கள் பலவிதமான போஸ்டர்களை அடித்து யொட்டி தங்களின் வாழ்த்தையும் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், மதுரை மாநகர் புறநகர் பகுதிகளில் விஜய் ரசிகர்களால் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.
அதில் "2026-ல் தளபதியின் வருகையால் கொடியும், கோட்டையும் நொடியில் மாறும்" என்ற வசனங்கள் அடங்கிய போஸ்டரில் தந்தை சந்திரசேகருடன் இணைந்து நடந்து வருவது போன்று இடம் பெற்றுள்ளது இதை மதுரை மாவட்ட தளபதி ரசிகர்கள் சார்பாக ஒட்டப்பட்டுள்ளது.